கொரோனா: நேரடி சூழ்நிலை பகுப்பாய்வு

சற்று முன்னர் மாங்குளத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு! விரைந்து சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸார்

Total Views : 164
Zoom In Zoom Out Read Later Print

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் இருந்த குண்டு ஒன்று சற்று முன்னர் வெடித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனியார் ஒருவருடைய காணியில் இருந்த குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.தொடர்புடைய செய்திகள்.


காணொளி