கொரோனா: நேரடி சூழ்நிலை பகுப்பாய்வு

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

Total Views : 196
Zoom In Zoom Out Read Later Print

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 9 5ஜி மற்றும் ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் டாப் எண்ட் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4820 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

இதில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இவற்றுடன் ரெட்மி நோட் 9 4ஜி வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சீன சந்தையில் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் துவக்க விலை 1599 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 17,940 என்றும் ரெட்மி நோட் 9 5ஜி மாடல் துவக்க விலை 1299 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 14,575 என்றும் ரெட்மி நோட் 9 4ஜி மாடல் 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 11,210 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.தொடர்புடைய செய்திகள்.


காணொளி