கொரோனா: நேரடி சூழ்நிலை பகுப்பாய்வு

இப்படியெல்லாம் இருந்தால் சனி உங்கள பிடிச்சுக்கும் !! உஷார் !!

Total Views : 140
Zoom In Zoom Out Read Later Print

இப்படியெல்லாம் இருந்தால் சனி உங்கள பிடிச்சுக்கும் !! உஷார் !!

சனி பகவான் எப்போது நமக்கு தீமை தருவார் !!

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனி பகவானே ஆவார்.சனி பகவான் யாருக்கும் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்க மாட்டார். பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும். இப்படிப்பட்ட சனி பகவான் நமக்கு எப்போதெல்லாம் தீங்கு விளைவிப்பார் என்பதை பற்றி பார்ப்போம்.

*உலர்த்தாத துணிகளை அணிந்திருப்பவர்களை கண்டால் அவர்களுக்கு சனி பகவான் தீமையை தருவார்.

*ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனி பகவான் அவர்களை பற்றிக் கொள்வார்.

*முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி பகவான் அவர்களை துன்புறுத்துவார்.

*குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனி பகவான் அவர்களை பற்றிக் கொள்வார்.

*விளக்கேற்றப்படாமல் இருள் சு ழ்ந்த இடங்கள் மற்றும் எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவும் பிடிக்கும். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.

*பொய், களவு, சூது,வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனி பகவானுக்கு பிடிக்கும்.

*சுத்தம் இல்லாத இடத்தில் சு ன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால், சனி பகவானுக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.

*மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனி பகவானுக்கு பிடிக்கும்.

*அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், தினந்தோறும் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி பகவான் நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.

*தாயிக்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி இவர்களை காலநேரம் பார்த்து சனி பகவான் தண்டிப்பார்.

என்றும் ஜெயமேதொடர்புடைய செய்திகள்.


காணொளி