கொரோனா: நேரடி சூழ்நிலை பகுப்பாய்வு

மாலத்தீவுக்கு செல்லும் நடிகர் சிம்பு: தொடர்ந்து அடுத்தடுத்து முடியும் படங்கள்!

Total Views : 161
Zoom In Zoom Out Read Later Print

மாலத்தீவுக்கு செல்லும் நடிகர் சிம்பு: தொடர்ந்து அடுத்தடுத்து முடியும் படங்கள்!

நடிகர் சிம்பு தான் நடிக்கவுள்ள முப்தி படத்துக்காக மாலத்தீவுக்கு படப்பிடிப்புக்கு செல்ல உள்ளார்.
இளையதலைமுறை நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் சிம்புவை போல் ஒரு நடிகர் இல்லை என்றே கூறலாம். ஆனால் அவர் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக திரைப்படங்கள் கொடுப்பதில் தவறி வருகிறார். சிம்பு ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டார் என்றால் அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு அவர் சரியாக செல்ல மாட்டார் என்று பல வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த தவறை சிம்பு இப்போதும் திருத்திக் கொள்வதாக தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் முஃப்தி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமான சிம்பு, சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வராததால் இந்த படமே டிராப் செய்யப்பட்டு விட்டதாக ஞானவேல்ராஜா அறிவித்தார். ஆனால் இப்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க உள்ளாராம் ஞானவேல் ராஜா. ஆனால் முன்பு படத்தை இயக்கிய நரதன் அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

அவருக்கு பதிலாக ஜில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா மீதிப் படத்தை இயக்க உள்ளாராம். இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம் சிம்பு. இதற்காக படக்குழுவினருடன் மாலத்தீவுகளுக்கு செல்ல உள்ளாராம். அங்கே மொத்தமாக சிம்பு நடிக்கும் காட்சிகளை எடுத்து முடிக்க உள்ளது படக்குழு.தொடர்புடைய செய்திகள்.


காணொளி