கொரோனா: நேரடி சூழ்நிலை பகுப்பாய்வு

கொரோனா தொற்று நோய் பாதிப்பு; ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிகரித்து வரும் உயிரிழப்பு

Total Views : 98
Zoom In Zoom Out Read Later Print

கொரோனா தொற்று நோய் பாதிப்பு; ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிகரித்து வரும் உயிரிழப்பு

கொரோனா பாதிப்புகளால் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றன.  இவற்றில் வல்லரசாக அறியப்படும் ரஷ்யாவிலும் பாதிப்புகள் காணப்படுகின்றன.  கொரோனா பாதிப்பு பரவ தொடங்கிய காலகட்டத்தில் ரஷ்யாவில் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை.
ஆனால், பிற நாடுகளை போல் ரஷ்யாவிலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது.  அதன் தலைநகர் மாஸ்கோவில் கொரோனா பாதிப்புகளால் பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கான பொறுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணிநேரத்தில் 76 பேர் நிம்மோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.  இந்நிலையில் அவர்கள் கொரோனா பாதிப்புகளால் பலியாகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

அதற்கு முன்தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த 77 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.தொடர்புடைய செய்திகள்.


காணொளி