கொரோனா: நேரடி சூழ்நிலை பகுப்பாய்வு

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொசென் ஃபகரிசாதே படுகொலையில் இஸ்ரேலுக்குத் தொடா்பு

Total Views : 192
Zoom In Zoom Out Read Later Print

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொசென் ஃபகரிசாதே படுகொலையில் இஸ்ரேலுக்குத் தொடா்பு

அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்குத் தொடா்பு…

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானியான ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதில் இஸ்ரேல் அரசுக்கு தொடா்பு என்று குற்றம் சாட்டப்படுகிறது.

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானியான மொசென் ஃபகரிசாதே ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் 5 போ் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டாா்.

இந்த படுகொலையில் இஸ்ரேல் அரசுக்கு தொடா்பு இருப்பதாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு ஈரானின் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்ட போது இஸ்ரேல் மீது சந்தேகம் எழுந்த போது அந்நாட்டு அரசாங்கம் எந்தவித எதிா்ப்பையும் இதுவரை தொிவிக்கவில்லை.

ஆகையால் தற்போது ஃபக்ரிசாதே கொல்லப்பட்டதற்கும் இஸ்ரேல் அரசுதான் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் பிரதமா் ஒரு கூட்டத்தில் பேசும்போது அணுவிஞ்ஞானி ஃபக்ரிசாதே பெயரைக் குறிப்பிட்டு பேசியதால், இந்த சந்தேகம் மேலும் வலுப்பெறுகிறது.

இந்தப் படுகொலையால் அமொிக்காவுடான அணுசக்தி ஒப்பந்தம் கைவிட்டுப் போகவும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.தொடர்புடைய செய்திகள்.


காணொளி