மீண்டும் ரீமேக் படம் இயக்குகிறாரா பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்
மீண்டும் ரீமேக் படம் இயக்குகிறாரா பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்

Total Views :
329




இயக்குனர் ஷங்கர் லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில்வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.
முதலில் பிரபாஸை வைத்து சாஹோ என்ற பிரமாண்ட படத்தை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. அதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப காட்சிகளை மாற்றும் பணிகளில் சுஜித் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவரின் திரைக்கதையில் சிரஞ்சீவிக்கு திருப்தி இல்லை என்பதால் அவரை தூக்கிவிட்டு வேறு இயக்குனரைப் படக்குழு தேடி வந்தது.
இந்நிலையில் இந்த படத்தை இயக்க இப்போது இயக்குனர் ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் தயாரிப்பு நிறுவனம். ஷங்கரும் சில மாற்றங்களை சொல்லி அதை செய்ய சம்மதித்தால் படத்தை இயக்கித் தருவதாக சொல்லியுள்ளாராம். இந்தியன் 2 படம் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டே செல்வதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.