கொரோனா: நேரடி சூழ்நிலை பகுப்பாய்வு

இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணி இணையும் படம் தொடங்கும் தேதி அறிவிப்பு! மகிழ்ச்சியான ரசிகர்கள்!

Total Views : 217
Zoom In Zoom Out Read Later Print

இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணி இணையும் படம் தொடங்கும் தேதி அறிவிப்பு! மகிழ்ச்சியான ரசிகர்கள்!


நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்படந்தம் ஆனார். ஆனால் நீண்டகாலமாக அந்த படம் தொடங்கப்படாமல் அப்படியே உள்ளது. அதற்கு மிக முக்கியமானக் காரணம் தனுஷ் வரிசையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதுதான். மேலும் இப்போது செல்வராகவனும் சாணிக்காயிதம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனால் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம்தான் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது வரை இந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்.


காணொளி