தளபதி விஜயின் மாஸ்டர் ரிலீஸை உறுதி செய்த படக்குழு!!
தளபதி விஜயின் மாஸ்டர் ரிலீஸை உறுதி செய்த படக்குழு!!

Total Views :
138




மாஸ்டர் உறுதியாக தியேட்டரில் தான் பொங்கலுக்கு வெளியாகப்போகிறது என படக்குழு தகவல்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் அடுத்தாண்டு பொங்களுக்கு தியேட்டரில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸில் விற்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இதற்கு தற்போது மாஸ்டர் படக்குழு பதில் அளித்துள்ளது. படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாஸ்டர் உறுதியாக தியேட்டரில் தான் பொங்கலுக்கு வெளியாகப்போகிறது. இதன் பின்னர் ஓடிடி-யில் விற்கப்படும். அதுவும் அமேசானில் வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.