கொரோனா: நேரடி சூழ்நிலை பகுப்பாய்வு

இலங்கையின் கொரோனா தொடர்பான நிலவரம்

Total Views : 176
Zoom In Zoom Out Read Later Print

இலங்கையின் கொரோனா தொடர்பான நிலவரம்

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் புதிதாக 473 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக கொவிட் 19 வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.கொழும்பு பிரதேசத்திலேயே கூடுதலான தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு 137 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் கம்பஹாவில் 63 பேரும், இரத்தினபுரியில் 35 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

ஓமானில் இருந்து வந்த ஒரு இலங்கையருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 6.00 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணித்தியாலங்களில் திவுலப்பிட்டி மற்றும் பேலியகொட கொவிட் கொத்தணியின் எண்ணிக்கை 19 ஆயித்து 431 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 372 பேர் பேலியகொட கொவிட் கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர்களாவர். இவ்விரு கொத்தணிகளிலும் பதிவான தொற்றாளர்களில் இதுவரை 12 ஆயிரத்து 793 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று வரை பதிவான நாட்டின் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 500 ஆகும். இவர்களில் 16 ஆயிரத்து 225 பேர் குணமடைந்துள்ளனர். ஆறாயிரத்து 168 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 410 பேர் குணமடைந்துள்ளனர். இந்தக் காலப் பகுதிக்குள் கொவிட் கொவிட் நோயாளர்களில் 8 பேர் மரணித்துள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். மெகசின் சிறைச்சாலைக் கைதி ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதன்படி இலங்கையில் இதுவரை உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.தொடர்புடைய செய்திகள்.


காணொளி